Thursday, February 23, 2012

ஜெயமணி அம்மையார்

  1. நான் மருத்துவ துறையில் பணிபுரிவதால் தினம் ஓரு மரணத்தை நேரில் பார்ப்பவன் .விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது இயற்கையை மரணம் அடைந்தாலோ உடல் உறுப்புகளை தானம் செய்ய  பெரும்பாலும் இறந்தர்வர்கள் உறவினர்கள் விரும்புவதில்லை நான் பணிபுரியும் மருத்துவ மனையில்  கண்தானம் செய்வோர் வருடத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டு பேர் செய்தாலே பெரிய விஷயம் என்னதான்  மீடியா களில் உடல் தானத்தை பற்றியோ கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மனம் வந்து தானம் செய்வோர் ஓரு சதவிதவதமே .தனியார் மருத்துவ மனைகளில் மரணம் ஏற்படும் பொழுது நோயாளிகளின் உறவினர்களிடம் பக்குவமாக பேசி கண் தானமோ அல்லது உடல் உறுப்பு தானம் செய்ய ஓரு தன்னல்வரை நியமிக்க முன்வர வேண்டும்.திருச்சியில் நடந்த ஓரு சாலை விபத்தில் மூளை சாவு ஏற்பட்டு  தன் மகன் திருமணத்து அன்று உடல் தானம் செய்த ஜெயமணி அம்மையார் என்பவர்  உண்மையில் அனைவரின் நெஞ்சில் என்றுமே நீங்காத இடம் பிடித்துவிட்டார்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

Post a Comment