Sunday, January 22, 2012

அரசு ஊழியர்களுக்கு ஓரு சபாஷ்

சமீபத்தில்  அடித்த தானே புயலில் எனது வீடும் பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்க பட்ட எனது ஊரில் எப்பொழுது சகஜ நிலைக்கு வரும் என எண்ணிய வேளையில் புயல் பாதித்த இரண்டு நாள் கழித்து  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வந்த துப்புரவு ஊழியர்கள் விழுந்த மரங்களையும் குப்பைகளையும் உடனடியாக அள்ளினார் மேலும் மின் ஊழியர்கள் புதிய மின்கம்பம்களை நட்டு புயல் அடித்த நான்காவது நாளே எங்கள் ஊருக்கு மின் இணைப்பை கொடுத்து வியப்பை ஏற்படுத்தினர். அதே போல் வருவாய் துறைனரும் புயலால் பாதித்த வீடுகளுக்கு முறையான நிவாரணம் வழங்கினர். இதில் ஆளும் கட்சி எதிர் கட்சி என எந்த பாகு பாடும் இல்லாமல் நியாமான புயல் நிவாரணம் வழங்கினர். இதில் முக்கியமா குறிப்பட வேண்டியது பொங்கல் அன்றும் அவர்கள் வேலை செய்தது. வீட்டில் மின் இணைப்பு துண்டிகபட்டால் மீண்டும் மின் இணைப்பு கொடுக்க  அதற்கு ஐம்பது ரூபாய் வீடு வாசலில் குப்பையை எடுக்க வாரம் பத்து ரூபாய் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு எந்த வேலை என்று சென்றாலும் பணம் இருந்தால்தான் வேலை முடியும் என வேலை என் இருந்த இக்காலகட்டத்தில் எந்த பணமோ பொருளுக்கோ ஆசை படாத அந்த மின் ஊழியர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் வருவாய் ஊழியர்களுக்கும் கண்டிப்பாக ஓரு சபாஷ் போடலாம் மேலும் சாலையும் உடனடியாக போடப்பட்டது                                                                                                        தங்கள் கருத்துகளை இடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

Post a Comment